மலேசியத் தமிழ் வலைப்பதிவுகள்:-

மன்றில் - 1

மன்றில் - 2

Sunday, September 14, 2008

"திருமன்றில்" வணக்கமும் வரவேற்பும்

அன்புமிக்க,

மலேசியத் தமிழ் வலைப்பதிவு நண்பர்களே, தமிழ்க்கூறும் நல்லுலக வலைப்பதிவர்களே முதற்கண் என்னுடைய பணிவான வணக்கங்களைக் கூறி, என்னுடைய 'திருமன்றில்' வலைப்பதிவுக்கு வருக வருகவென அன்புடன் அழைக்கிறேன்.

தமிழ் - தமிழர் - தமிழியல் நலம்பேணும் வலைப்பதிவுகளை ஒரு குடையின் கீழ் இணைக்க வேண்டும் என்ற என் கனவின் மறுவடிவமே இந்தத் 'திருமன்றில்'.

மலேசிய வலைப்பதிவுகளிலும் தமிழ்க்கூறும் நல்லுலக வலைப்பதிவுகளிலும் வெளிவரும் தமிழ் - தமிழர் - தமிழியல் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், இடுகைகள், படைப்புகள் என அனைத்தையும் ஒரே இடத்தில்.. ஒரே தளத்தில் உடனடியாகத் தமிழருக்கு வழங்கவேண்டும் என்ற விருப்பத்தின் வெளிப்பாடுதான் இந்தத் 'திருமன்றில்'.

பரந்து விரிந்து கிடக்கும் இணைய வெளியில் உலாவரும் தமிழ் - தமிழர் - தமிழியல் செய்திகள் அனைத்தையும் 'திருமன்றில்' பதிவில் ஒருங்கிணைத்துவிட முடியாதுதான்.

ஆயினும், இணையத் தேடுபொறிகளில் தனித்தனியே தேடிப்பிடித்து படிக்க வேண்டிய தமிழ் - தமிழர் - தமிழியல் செய்திகளையும் அவ்வாறான செய்திகளை வழங்கும் வலைப்பதிவு களையும் முடிந்தவரையில் அடையாளங்கண்டு தொகுப்பதற்கான முயற்சியின் முதல்படிதான் 'திருமன்றில்'. 'திருமன்றில்' வலைப்பதிவைப் பார்வையிடும் தமிழ் - தமிழர் - தமிழியல் வலைப்பதிவர்கள் தயவுகூர்ந்து தங்கள் வலைப்பதிவு பற்றி தெரிவிக்க வேண்டுகிறேன்.

இணையத்தின் வழி இனியத் தமிழை தமிழாகவும் தமிழரைத் தமிழராகவும் வளர்த்தெடுக்க விழையும் 'திருமன்றில்' பணிக்குத் தோளுரம் கொடுக்குமாறு வேண்டுகிறேன்.

திருமன்றில்' தொடர்பான தங்களின் எண்ணங்களையும் ஏடல்களையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.

நன்றி, வணக்கம்.

அன்புடன்,

திருத்தமிழ் ஊழியன்

சுப.நற்குணன்,

மலேசியா.

26 comments:

Anonymous said...

திருத்தமிழ் ஊழியன் ஐயா சுப நற்குணன் அவர்களே...!

தங்களது திருத்தமிழ் வலைப்பதிவு வழி ஆற்றிவரும் தமிழ்ச்சேவைகளைக் கண்டு மனம் நெகிழ்ந்திருக்கிறேன்.!!

தமிழ் மணம் பரப்ப மற்றொரு வலைப்பதிவா? ஆனந்தம், பரவசம் கொள்கிறது என் மனம்.

தங்களின் "திருமன்றில்" என்னையும் ஒரு ஊழியனாக ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகின்றேன்.

தங்களின் முயற்சி வெற்றி பெற எனது மனம் கனிந்த நல்வாழ்த்துகள்...!

"தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை"

இதய வாழ்த்துகளுடன்,

சந்திரன் இரத்தினம்,
ரவாங், சிலாங்கூர்.

Sathis Kumar said...

இதோ வந்துவிட்டது திருமன்றில்! தமிழ் கூறும் நல்லுலகின் மற்றுமொரு வலைப்பதிவுகளின் திரட்டி..

திருமன்றில் தமிழ்ச் சேவைக்கு எங்களது ஆதரவு என்றும் இருக்கும்..

ஐயா சுப நற்குணன் அவர்களின் முயற்சிக்கு பாராட்டுகள், தொடரட்டும் உங்கள் சேவை.. :)

சுப.நற்குணன்,மலேசியா. said...

@திருத்தமிழ் அன்பர்; இனிய நண்பர் சந்திரன் இரத்தினம்,

தங்களின் வாழ்த்துக்கு நன்றி. தமிழ் தமிழர் தமிழியல் சார்ந்த செய்திகளை ஒரே இடத்தில் காண இனி திருமன்றிலுக்கு வருக!

***********************************

@திருத்தமிழ் அன்பர் சதீசு,

தங்களின் பாராட்டுக்கும் ஆதரவுக்கும் நன்றி.

மலேசியாவில் இவ்வாறு ஒரு திரட்டியை உருவாக்க விரும்பியதன் விளைவுதான் இந்தத் 'திருமன்றில்'.

இதனை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதற்கு தங்களின் மேலான கருத்துகளை வழங்கவும்.

அகரம் அமுதா said...

இப்பணி மிக அரிய பணி. இப்பணியை முன்னெடுத்துச்செய்யத்துணிந்த தங்களைப் பாராட்டாமல் இருக்கமுடியாது. தமிழ்கூறும் நல்லுலகிற்கு தங்களின் இப்பணி மகத்தான உன்னதமான பணியாகும் . வாழ்த்துகள். இப்பொழுதே இவ்வலையை என்வலையில் தொடுப்புக் கொடுத்துவிடுகிறேன். என் வலையையும் தங்களின் இவ்வரிய வலையில் தொடுப்புக் கொடுத்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன். நன்றி வணக்கம்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் அகரம் அமுதா,

பொதுவான தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டிகள் பல உள்ளன. ஆயினும் தமிழை - தமிழியலை முன்னெடுக்கும் ஒரு தனி திரட்டி இல்லையே என்ற குறை என்னுள் இருந்தது. அதனை களையும் ஒரு நடவடிக்கைதான் இது.

மேலும், தமிழை முன்னெடுக்கும் தமிழ் உணர்வுள்ள வலைப்பதிவர்களை ஒருங்கிணைக்கவும் ஊக்குவிக்கவும் 'திருமன்றில்' பயன்படுமானால் மிகவும் மகிழ்வேன்.

Anonymous said...

திருமன்றில் வலைப்பதிவுக்கு எமது வலைப்பதிவில் இணைப்புத் தந்துள்ளேன்.

நன்றி.

Anonymous said...

அன்புடையீர் வணக்கம்
என் பக்கத்தைத் தங்கள் பதிவில் இணைத்தமைக்கு நன்றி.

மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா

Anonymous said...

வணக்கம்,

தங்கள் தளம் எனது தளத்தில் இப்போது இணைத்துள்ளேன், தங்கள் இணைப்பிற்கு நன்றி

அன்புடன்

சுகுமாரன்

Anonymous said...

திரு. நற்குணன் அவர்களுக்கு,

`திருமன்றில்' நன்முயற்சி.

வாழ்த்துகள்.

அன்புடன்

அ. நம்பி

priyamudanprabu said...

உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

http://priyamudan-prabu.blogspot.com/

ஆதவன் said...

மலேசியாவில் தமிழ் இணையத் திரட்டி இல்லாத குறையைத் திருமன்றில் தீர்த்து வைத்துள்ளது.

அதுவும், தமிழ், தமிழர், தமிழியல் சார்ந்த வலைப்பதிவுகளையும் வலைமனைகளையும் திரட்டி ஒரே இடத்தில் தாங்கள் கொடுத்திருப்பது பாராட்டுதலுக்கு உரிய அரிய செயலாகும்.

தமிழை முன்னெடுக்கின்ற நம்முடைய முயற்சிகளின் வெற்றிகளில் இதுவும் ஒன்றாக நிலைபெறும்.

தமிழுயிரை இணைத்தமைக்கு நன்றி மொழிகின்றேன்.

தாய்மொழி said...

தங்களின் வலைப்பதிவு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. உங்களின் நட்சிறப்பு மென் மேலும் வலம் பெற எங்களின் ஆதரவு என்றும் நிலைக்கும். தங்களின் ஒவ்வொரு இடுகைகளும் மிக சிறப்பு. கூறப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் அனுபவப் பூர்வமாக தோன்றுகிறது.

அ. பசுபதி (தேவமைந்தன்) said...

திருத்தமிழ் நண்ப!
என் வலைப்பூவைத் தங்கள் 'திருமன்றில்' வலைப்பதிவில் இணைத்தமைக்கு மிகவும் மகிழ்கிறேன்.
தங்கள் வலைப்பதிவை என் வலைப்பூவில் தொடுக்க விழைகிறேன்.
அன்பு,
தேவமைந்தன்

தமிழ் அலை said...

அன்புமிகு தோழர்
தங்களின் தமிழருக்கான இப்பணி சிறக்கட்டும். தமிழுணர்வாளருக்கு பயணுள்ளதாக அமையட்டும்.
அன்புடன்
இசாக்
தமிழ் அலை ஊடக உலகம்

தாய்மொழி said...

தமிழ்ச் சார்ந்த விஷயங்களை மிக அழகாக சித்தரிக்கும் உங்களைக் கண்டு நான் பெருமிதம் கொள்கிறேன். உங்கள பணிகள் நன்று.

முனைவர் இரா.குணசீலன் said...

மிகவும் நன்றாக உள்ளது தொடர்க வாழ்த்துக்கள்...........

முனைவர் இரா.குணசீலன் said...

திருமன்றில் வலைப்பதிவுக்கு எமது வலைப்பதிவில் இணைப்புத் தந்துள்ளேன்

Anonymous said...

கண்டிப்பாக தமிழ் விரும்பிகள் அனைவருக்கும் தங்கள் தளம் துனையாக இருக்கும்

தமிழ் said...

அருமையான பணி
சொல்ல வார்த்தை இல்லை நண்பரே
தங்களின் செயலுக்கு
தலை வணங்கிறேன்

வாழ்த்துகள்

அன்புடன்
திகழ்மிளிர்

கிருஷ்ணா said...

எனது இரண்டாவது வலைப்பூவையும் இங்கே இணைப்பீர்கள் என்று நம்புகிறேன். கவித்தமிழில் கவிதை வழி எண்ணங்களை வெளிப்படுத்துகிறேன்.. இந்த வலைப்பூவில்.. கட்டுரை வழி நினைத்ததைச் சொல்கிறேன்.. முகவரி: http://www.krishnausj1.blogspot.com/

ஸ்ரீ.... said...

வணக்கம்.

நான் ஸ்ரீ.... கடந்த 10 மாதங்களாகப் பதிவெழுதி வருகிறேன். உங்களது திரட்டியில் எனது பதிவையும் இனைக்கும்படி விண்ணப்பிக்கிறேன். நன்றி.

ஸ்ரீ....

அ. பசுபதி (தேவமைந்தன்) said...

சுப.நற்குணன் ஐயா அவர்களுக்கு,
வணக்கம்.
என் வலைப்பதிவில் திருமன்றிலுக்குத் தொடுப்புக் கொடுக்க முயன்றேன். 'டெம்ப்ளேட்'டில் முயன்றேன். முடியவில்லை.
அருள்கூர்ந்து எவ்வாறு அதைச் செய்வது என்பதை karuppannan.pasupathy@gmail.com க்கு சுருக்கமாகவேனும் தெரிவியுங்கள்.
மிக்க நன்றி.
அன்புடன்,
தேவமைந்தன்

குறிப்பு:
இணையமலசும் நடுவங்களிலிருந்தே இப்பணி செய்கிறேன். இல்லத்தில் இணைய இணைப்பு இல்லை.

முனைவர் இரா.குணசீலன் said...

திருந்தமிழில் எனது வலைப்பதிவை இணைத்தமை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்...
மிக்க மகிழ்ச்சி நண்பரே.........

கவிவர்மன் said...

sttiba85@gmail.com

கணநாதன் said...

சுப நற்குணன் அவர்களுக்கு முதற்க்கண் எனது வணக்கம் எனது இதற்கு தகுதி பெறுமா என மதிப்பிடவும் முடிந்தால் திருத்தங்களை தயங்காமல் குறிப்பிடவும் நன்றி

கணநாதன்


http://www.ganeshgrunts.blogspot.com/

ப.கோபாலகிருஷ்ணன் (p.gopalakrishnan) said...

திரு சற்குணம் அய்யா அவர்களுக்கு எனது வணக்கம். உங்களது தமிழ் தொண்டுகளுக்கு எனது நன்றிகள். எனது தமிழிசைக் குரல் வலைதளத்தை உங்களது தளத்தில் இணைக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.