மலேசியத் தமிழ் வலைப்பதிவுகள்:-

மன்றில் - 1

மன்றில் - 2

Sunday, September 14, 2008

"திருமன்றில்" வணக்கமும் வரவேற்பும்

அன்புமிக்க,

மலேசியத் தமிழ் வலைப்பதிவு நண்பர்களே, தமிழ்க்கூறும் நல்லுலக வலைப்பதிவர்களே முதற்கண் என்னுடைய பணிவான வணக்கங்களைக் கூறி, என்னுடைய 'திருமன்றில்' வலைப்பதிவுக்கு வருக வருகவென அன்புடன் அழைக்கிறேன்.

தமிழ் - தமிழர் - தமிழியல் நலம்பேணும் வலைப்பதிவுகளை ஒரு குடையின் கீழ் இணைக்க வேண்டும் என்ற என் கனவின் மறுவடிவமே இந்தத் 'திருமன்றில்'.

மலேசிய வலைப்பதிவுகளிலும் தமிழ்க்கூறும் நல்லுலக வலைப்பதிவுகளிலும் வெளிவரும் தமிழ் - தமிழர் - தமிழியல் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், இடுகைகள், படைப்புகள் என அனைத்தையும் ஒரே இடத்தில்.. ஒரே தளத்தில் உடனடியாகத் தமிழருக்கு வழங்கவேண்டும் என்ற விருப்பத்தின் வெளிப்பாடுதான் இந்தத் 'திருமன்றில்'.

பரந்து விரிந்து கிடக்கும் இணைய வெளியில் உலாவரும் தமிழ் - தமிழர் - தமிழியல் செய்திகள் அனைத்தையும் 'திருமன்றில்' பதிவில் ஒருங்கிணைத்துவிட முடியாதுதான்.

ஆயினும், இணையத் தேடுபொறிகளில் தனித்தனியே தேடிப்பிடித்து படிக்க வேண்டிய தமிழ் - தமிழர் - தமிழியல் செய்திகளையும் அவ்வாறான செய்திகளை வழங்கும் வலைப்பதிவு களையும் முடிந்தவரையில் அடையாளங்கண்டு தொகுப்பதற்கான முயற்சியின் முதல்படிதான் 'திருமன்றில்'. 'திருமன்றில்' வலைப்பதிவைப் பார்வையிடும் தமிழ் - தமிழர் - தமிழியல் வலைப்பதிவர்கள் தயவுகூர்ந்து தங்கள் வலைப்பதிவு பற்றி தெரிவிக்க வேண்டுகிறேன்.

இணையத்தின் வழி இனியத் தமிழை தமிழாகவும் தமிழரைத் தமிழராகவும் வளர்த்தெடுக்க விழையும் 'திருமன்றில்' பணிக்குத் தோளுரம் கொடுக்குமாறு வேண்டுகிறேன்.

திருமன்றில்' தொடர்பான தங்களின் எண்ணங்களையும் ஏடல்களையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.

நன்றி, வணக்கம்.

அன்புடன்,

திருத்தமிழ் ஊழியன்

சுப.நற்குணன்,

மலேசியா.